இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான பெர்சி அபேசேகர தனது 87ஆவது வயதில் இன்று(30) பிற்பகல் காலமானார்.
அன்னார் காலி ரிச்மண்ட், அலோசியஸ் மற்றும் பத்தேகம சிறி ரத்தனசார வித்தியாலயங்களின் பழைய மாணவராவார்.
மறைந்த பெர்சி அபேசேகர 1979 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் ஊக்குவிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
