பெலருஸ் பயணமாகிறார் வெளிவிவகார அமைச்சர்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் 2026 மே மாதத்தில் பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும் இந்த விஜயத்தின் போது, அவர் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இறுதியாக, அங்கு கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் நலன்கள் குறித்தும் அவர் கேட்டறியவுள்ளார்.

இச்சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles