பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 மற்றும் 33 வயதுகளுடைய இரு பெண்களே ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகொலை சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கொண்டுசென்றனர் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாகவே கராப்பிட்டி பகுதியில் இருந்து பூஸ்ஸ பகுதிக்கு துப்பாக்கிகளை கொண்டு சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. பெலியத்த பகுதியில் அபே ஜனபலவேகய கட்சியின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி தாக்குதலுக்கு இரு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.










