பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கால்நடைப் பண்ணைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து, சுமார் 150 கிலோ எடையுள்ள பன்றியைக் கொன்று இறைச்சியை விற்பனை செய்த மூவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இப்பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உட பேராதனை பிரதேசத்தில் இந்த மிருக பண்ணை அமைந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் திங்கட்கிழமை (12) இரவு பண்ணைக்குள் நுழைந்து, பன்றியை கொன்று அதன் உடல் பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பண்ணையில் நன்கு வளர்ந்த பன்றி காணாமல் போனதாக பண்ணையின் முகாமையாளரால் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, உட பேராதனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பன்றி இறைச்சி இருந்தத்கை அவதானித்திருந்தனர்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் குறித்த பண்ணையில் கோழிகள் காணாமல் போயுள்ளதுடன், இந்த விலங்குகள் திருடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இப்பண்ணையில் இறைச்சிக்காகவும், விவசாய பீடத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் விலங்குகள் வளர்க்கப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.