பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் இந்த தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம். கொரோனாவுக்கு எதிராக, ‘பேக்ஸ்லோவிட்’ என்ற தடுப்பு மாத்திரையை பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது தற்போது பரிசோதனையில் உள்ளது.இந்நிலையில் எம்.பி.பி., எனப்படும் சர்வதேச மருந்து காப்புரிமை தொகுப்பு அமைப்புடன், பைசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
உலகளவில் பல்வேறு மருந்துகளை குறைந்த விலையில் தயாரிப்பதற்கான காப்புரிமையை பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு. தற்போது, இந்த அமைப்புடன் பைசர் ஒப்பந்தம் செய்துள்ளதன் வாயிலாக, அது தயாரிக்கும் கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்யும் உரிமம், பல்வேறு நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.