பொதுத்தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த வலியுறுத்து

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ள கோரிக்கை நியாயமானது எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எந்தவொரு தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயார். ஆனால் முதலில் பொதுத்தேர்தலை நடத்துவதே சிறந்தது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பொதுத்தேர்தலுக்கு சென்றால் அதில் வெற்றிபெறும் தரப்புக்கே பொதுத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டும். அது நியாயமானதாக அமையாது. எனவேதான் முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles