பாராளுமன்ற பேரவையின் 6 வது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (03) பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸனாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கு, 2002ஆம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களுக்கு பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி வழங்கப்பட்டது.
1. ஜனக ரத்னாயக்க (தலைவர்)
2. திருமதி சதுரிகா விஜேசிங்க (உறுப்பினர்)
3. மொஹான் சமரனாயக்க (உறுப்பினர்)
4. உதேனி விக்ரமசிங்க (உறுப்பினர்)
5. பேராசிரியர் ஜனக ஏக்கனாயக்க (உறுப்பினர்)
