இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி டக்ளஸ் நாணயக்காரவை நியமிக்குமாறு அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
டக்ளஸ் நாணயக்கார தற்போது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சபை உறுப்பினராக பணியாற்றுகிறார்.
1983 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் அரச சேவையில் பல உயர் பதவிகளை வகித்தார். அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் செயலாளர் போன்ற பதவிகளை வகித்து ஓய்வு பெற்ற இவர் கடந்த ஜூலை மாதம் முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட ஜனக ரத்னாயக்க, பாராளுமன்றம் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










