ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பொன்சேகா எந்நேரமும் வெளியேறலாம். அவருக்கான கதவு திறந்தே உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரச தரப்பின் ஒப்பந்தத்தையே பொன்சேகா நிறைவேற்றிவருகின்றார். அவரின் நூல் வெளியீட்டு நிகழ்வைக்கூட ஜனாதிபதி செயலகமே நடத்தி இருந்தது. எனவே, அவர் தற்போது எந்த பக்கம் நிற்கின்றார் என்பது தெளிவாகின்றது.
அவர் எமது அணியில் இருந்து வெளியேறலாம். ஆதனால் பாதிப்பில்லை. ஆனால் இப்படி கட்சியை, தலைமையை தாக்கிவிட்டு விடைபெற முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
அதேவேளை, ஆளுங்கட்சியில் உள்ள சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர். டலஸ் அழகப்பெருமவுடனும் பேச்சு நடத்தப்படுகின்றது.
எனக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெற வைப்பதே எமது நோக்கம்.” – என்றார்.