‘பொருளாதார நெருக்கடி அதிகரித்தால் மக்கள் வீதிக்கு இறங்குவர்”

பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் (கலாநிதி) நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால் ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் என்றும், இதனால் குழப்பமான சூழ்நிலை நாட்டில் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதிக வருமானம் பெறும் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இரண்டு தரப்பினர் மத்தியிலும் ஏற்படுகின்றன பொருளாதார அசௌகரியங்கள் பிரிந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டு, குறைந்த வருமானம் பெறுபவர்களின் அசௌகரியங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்தார். தற்பொழுது காணப்படும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவீனங்களை நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டார்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்தியதன் ஊடாக கடந்த  வருடத்தில் செலவீனத்தை 2 பில்லியன் ரூபாவரையிலும், இந்த வருடத்தில் 1.3 பில்லியன் ரூபாவரை குறைக்கமுடிந்திருப்பதாகவும், இதன் ஊடாக மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாகத் தற்பொழுது அரசாங்கத்தின் வருமானம் 1.2 பில்லியன் ரூபாவாக மாத்திரம் காணப்படுவதுடன், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்க முடிந்தால் அரசாங்கத்தின் வருமானத்தில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்தார்.

மேலும் இந்த நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியாது, இருந்தபோதும் இவ்வருடம் டிசம்பர் மாதம் வரை இந்த நெருக்கடிகளைப் பொறுத்துக் கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் 14-15 விகிதம் வரையில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் விளக்கமளித்தார்.

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நோக்கு” என்ற தலைப்பில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற விவாதங்களின் போது, நிதி தொடர்பான விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலூக்கப் பங்களிப்பை உறுதிப்படுத்தவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரப் பாதை குறித்து பயனுள்ள கலந்துரையாடலை ஏற்படுத்தவும் பாராளுமன்ற செயலகம் இந்தக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்திருந்தது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles