பொருளாதார மையங்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் அரச மற்றும் தனியார் துறை விநியோக வண்டிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக பிரத்தியேக நிரப்பு நிலையங்களுக்கு பெயரிடப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 11 பிரத்தியேக பொருளாதார மையங்களைப் பூர்த்தி செய்ய முப்படைகளால் இயக்கப்படும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் அறிவிக்கபட்டுள்ளது.
இதன்படி இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு இரத்மலானை விமானப்படை முகாமில் இருந்தும், மீகொட பொருளாதார நிலையத்துக்கு மத்தேகொட இராணுவ முகாமில் இருந்தும் எரிபொருள் வழங்கப்படும்.
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்துக்கு இரத்மலானை விமானப்படைத் தளம் மற்றும் மத்தேகொட பொறியியலாளர் படைத் தலைமையகத்தில் இருந்து எரிபொருள் வழங்கப்படும்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு இனாமலுவவில் உள்ள இலங்கை இராணுவத்தின் 53 ஆவது படைப் பிரிவின் தலைமையக வளாகத்திலிருந்து எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
