“கட்சியில் தவிசாளர் பதவியை வகிக்கும் பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும், கட்சிக்குள் பேச வேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்பட்ட பேரணியை சரத் பொன்சேகா விமர்சித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை கட்சியில் இணைத்துக்கொண்டமை குறித்தும் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபர்களின் சொத்து அல்லவென தலைவரையும் சாடிவருகின்றார்.
இந்நிலையிலேயே ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.










