பொலிஸார் – பொதுமக்கள் முறுகல்! அறுவர் கைது!

வீரகெட்டிய, அத்தனயால பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகள் சிலரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் குழுவொன்றை சோதனை செய்ய முற்பட்ட போது ​​பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது 02 உப பொலிஸ் பரிசோதகர்கள், 02 சார்ஜன்ட்கள், 02 கான்ஸ்டபிள்கள், 02 கிராம பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் இருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதன்போது இளைஞர் ஒருவர் உப பரிசோதகர் ஒருவரின் இரு காதுகளையும் கடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த உப பரிசோதகர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles