பொலிஸ்மா அதிபரை பதவிநீக்க சபையில் பிரேரணை?

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது என தெரியவருகின்றது.

இதற்கமைய பொலிஸ்மா அதிபர் தாமாக பதவி விலகி செல்ல மறுத்தால், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அவரை வெளியேற்றுவதற்கு ஆளுங்கட்சி தயாராகிவருகின்றது.

மாத்தறை, வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னர் இது விடயம் தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொலிஸார்மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவராக செயல்பட்டுள்ளார் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Articles

Latest Articles