“​பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 07, விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடத்தவுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் ஒன்றியம் நாடு முழுவதிலும் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே மாவட்ட ரீதியில் நடத்திய ஆடற்கலைப் போட்டியில் வெற்றி பெற்ற அறநெறிப் பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள 13 அறநெறிப் பாடசாலைப் பாடசாலைகள் இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளன.

இந்த இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும். மூன்றாம் இடத்தைப் பெறும் அறநெறிப் பாடசாலைக்கு முப்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக் கேடயமும் வழங்கப்படும்.

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட போட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரை பங்குபற்றிய அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவ மாணவிகளும் நடனம் கற்பித்த அறநெறிப் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த ஆடற்கலைப் போட்டியில், “நம்ம தமிழ் பசங்க” என்ற விருது ஒன்றும் வழங்கப்படவிருக்கிறது.

மலையகம் 200ல் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் சிலர் இணைந்து “மலையகத்தின் 200” வருட கால வரலாற்றை மையமாக வைத்து பாடலொன்றை இயற்றி, ஒலி, ஔிப்பதிவு செய்து வௌியிட்டுள்ளனர். இந்திய திரைப்படப் பாடலுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ள இப்பாடல் வைரலாகி வருகிறது. இதில் புதிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

“​பொழப்பு தேடி” என்ற தலைப்பில் இந்தப் பாடல் வௌியிடப்பட்டுள்ளது. இவர்களது இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து “நம்ம தமிழ் பசங்க” என்ற விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles