நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் யாவும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு நேற்றுவரை 4 கோடியே 85 இலட்சத்து 60 ஆயிரம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க நாட்டுக்கு கிடைக்கவேண்டிய முழுமையான அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக மற்றும் இரண்டாவதாக மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றுமன்றி தேவையான பூஸ்டர் தடுப்பூசிகளும் முழுமையாக நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இதுவரை எஸ்ட்ரா செனேகா,சைனோபாம், ஸ்புட்னிக், மொடர்னா, மற்றும் பைசர் தடுப்பூசிகள் 4 கோடியே 80 லட்சத்து 60 ஆயிரமளவில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
