போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு சிறை

யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும் போதை மாத்திரை விநியோகத்தை அவர்கள் முன்னெடுத்து வந்தனர் என்று பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.

இருவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் தலா 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles