யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் நேற்றிரவு சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அதனை அடுத்து, இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்களை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










