போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார் எனக் கூறப்படும் நபரொருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் வைத்து அகற்றப்பட்டுள்ளதுடன், பெறப்பட்ட பணத் தொகை தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்தநிலையில் சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
