போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க கூட்டு நடவடிக்கை

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து வெளியிட்ட பிரதமர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இதுதொடர்பாக பல தடவைகள் பாதுகாப்புச் சபையிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

சர்வதேச கடல் மார்க்கத்தை கண்காணிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏனெனில், போதைப்பொருள் என்பது இந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.
எம்முடன் இந்தியா தகவல்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறது.

பாதுகாப்புத் துறையினர், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நவீன கருவிகளின் ஊடாக தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம்தான், உலகின் இன்று இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்த எமது பாதுகாப்புத் துறையினர் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

கல்விக் கூடங்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களின், போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பாக அரசாங்கம் தற்போது அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சட்டங்களின் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாம் தீர்மானித்துள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles