போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுடன் மெல்பேர்ண் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பா?

நுவரெலியா – தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் போராட்டம்!
நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியா- தலவாக்கலை பேருந்து சாரதிக்கும், நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துடனர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

இதனால் இன்றைய தினம் (01) நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் தலவாக்கலை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு தனியார் பேருந்துக்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த நுவரெலியா தலவாக்கலை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

குறிப்பாக இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது. இதன்காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles