போயா நாட்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி – டயானா

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இராஜாங்க அமைச்சரின் யோசனை அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை,” என்று அவர் குழு கூட்டத்தில் கூறினார்.

பார்கள் மற்றும் மதுபானக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்று திருமதி கமகே முன்மொழிந்தார்.

Related Articles

Latest Articles