போராடி தோற்றது இலங்கை!

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் 1 – 1 என சமப்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அறிமுகமான சுழல்பந்துவீச்சாளர் தன்விர் இஸ்லாம் தனது இரண்டாவது போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜனித் லியனகே தனி ஒருவராக வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது.

 

Related Articles

Latest Articles