போராடி தோற்றது இலங்கை அணி!

ரி – 20 உலக்கிண்ண தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி இரு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 125 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது.

Related Articles

Latest Articles