போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

” போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம்  கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு கங்காராமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விகாரை வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களால் நடப்பு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறு கூறினார்.

” எல்லா சந்தர்ப்பங்களிலும் நான் ராஜபக்சக்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளேன். எனவே, அவர்கள் எப்படி எனது  நண்பர்களாவார்கள்? நான் மக்களின் நண்பன்.” -எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசியல் முறைமையை மாற்றி, அனைத்துக்கட்சிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படவே எதிர்பார்க்கின்றேன், இளைஞர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது, எதிர்ப்பு அரசியலை நடத்தினால் அது நாட்டுக்குதான் தீங்காக அமையும்.

அதேவேளை, தற்போதைய முறைமைக்கு (சிஸ்டம்) எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எல்லா துறைகளிலும் மாற்றம் கோரப்படுகின்றது. அமைதியாக போராடுபவர்களுக்கு, அதற்கான பரப்புரைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும். மௌனமாக இருப்பவர்களின் யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றுக்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

எனினும், போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும், வீடுகளை எரிப்பதற்கும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றை கைப்பற்றுவது ஜனநாயகம் அல்ல. அது சட்டவிரோத நடவடிக்கை. அவ்வாறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”  – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles