போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிசார் தாக்குதல் – முதற்கட்ட அறிக்கை நாளை ஆணைக்குழுவிடம்

வெள்ளிக்கிழமை இரவு மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை நாளை (6) ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் தொடரும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு அதிக தொகை செலவிடப்பட்டதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு போராட்டம் நடத்தியதுடன் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மற்றொரு குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு அந்தக் கும்பலைக் கலைக்க போலீசார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்ட மூவர் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles