” போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் வேட்டையாடப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி போராட வேண்டிவரும்.”
இவ்வாறு எச்சரிககை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
” நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளுக்காகவுமே இளைஞர்கள் வீதியில் இறங்கினர். போராடும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால் இப்படியான இளைஞர்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இதனை நாம் கண்டிக்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வேட்டையாடுவதை உடன் நிறுத்தவும். அவ்வாறு இல்லாவிட்டால், இளைஞர்களை காக்க நாம் வீதியில் இறங்குவோம். என்றும் இளைஞர்களுக்கு பக்கபலமாக இருப்போம்.” – எனவும் சஜித் குறிப்பிட்டார்.