போராட்டம் வெற்றி – மலையக மக்கள் முன்னணி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ஒருநள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 ” பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தொடர்ச்சியாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுதும் அந்த பேச்சுவார்த்தையில் கம்பெனிகள் இணக்கம் தெரிவிக்காத காரணமாக இந்த போராட்டம் கம்பனிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் இருக்கின்ற ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்காத போதிலும் ஏனைய தொழிற் சங்கங்களும் முழுமையான ஆதரவை கொடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி எடுக்கப்படுகின்ற அனைத்து தீர்மானங்களும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து முடிவுகள் எடுக்கப்படும் ஆக இருந்தால் நிச்சயமாக அந்த முடிவுகள் சாத்தியமானதாக அமையும் என்பதே என்னுடைய கருத்தாகும். இன்றைய போராட்டத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மலையக மக்கள் முன்னணி தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles