போர் காலத்திலும் கனடா பயங்கரவாதத்துக்கு உதவியது – மொட்டு கட்சி எம்.பி. சீற்றம்

” கனடா தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்ட கருத்து உண்மையே. அரசின் நிலைப்பாட்டையே அவர் பிரதிபலளித்துள்ளார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன மேற்கண்டவாறு கூறினார்.

” இலங்கையில் போர் இடம்பெற்றபோது பயங்கரவாதத்துக்கு உதவும் வகையிலேயே கனடா செயற்பட்டது. இன்றும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையிலேயே அந்நாடு செயற்படுகின்றது.

இலங்கை இறைமையுள்ள – சுயாதீன நாடு. எனவே, தேவையற்ற தலையீடுகளை நாம் அனுமதிக்கபோவதில்லை.

இந்தியா பக்கமோ, கனடா பக்கமோ அல்ல. இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றும் நாடு. ஆனால் கனடா விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் உண்மையையே வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு என்பது அரசின் அறிவிப்பாகவே கருதப்படும்.
” – என்றார்.

” சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆம் கட்ட கடன் விரைவில் கிடைக்கும். இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமா,

” அலுவலக மட்டத்திலான பேச்சுகளில் துரித இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுகள் தொடரும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடல்களின் பின்னர் எமக்கு 2ஆம் கட்ட கடன் உதவி கிடைக்கும். எனவே, இது விடயத்தில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டுமானால் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த இலக்குகளை நாம் அடைய வேண்டும்.

அதேவேளை, இந்த அரசு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்ப ஆடுவதாக சிலர் கூறினர். அவர்களுக்கும் தற்போது தெளிவாக பதில் கிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.

Related Articles

Latest Articles