போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை – ஹமாஸை அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர் சூளுரை!!

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை “நிபந்தனையின்றி” விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர், “காசாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்பிக்கை மற்றும் வாக்குறுதியின் எதிர்காலத்திற்காக நாம் போராட விரும்புகிறோமா அல்லது கொடுங்கோன்மை மற்றும் பயங்கரவாதத்திற்கு சரணடைவோமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

இஸ்ரேல் “இந்தப் போரைத் தொடங்கவில்லை”. ஆனால் இந்தப் போரில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம். வெற்றி வரும் வரை இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கு எதிராக நிற்கும்.” என்றார்.

Related Articles

Latest Articles