உலக கிண்ண கால்பந்தின் சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
உலக கிண்ண கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டீனா அணிகள் மோதின.
பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 46வது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து ஆர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
பின்னர் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை போலந்து அணி பிடித்தது. இதன்படி சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.










