பௌர்ணமி நாளில் மதுபானம் விற்றவர் கைது!

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான போத்தல்களில் 15 முழு போத்தல்களும் 165 கால் போத்தல்களும் 72 பியர் போத்தல்களும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக யாழ். மாவட்ட போதை ஒழிப்பு பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரனையின் பின் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளன.

Related Articles

Latest Articles