ம.ம.முவின் முக்கிய புள்ளி அனுசாவுடன் சங்கமம்!

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி செயலாளர் தங்கராஜா பிரசாத், இன்று உத்தியோகபூர்வமாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் உப தலைவராக பதவியேற்றார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் வெளியிட்டிருந்தார்.

இதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா

” பிரதி தலைவராக தங்கராஜ் பிரசாத் எமது அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்து பணியாற்றுவது தொழிற்சங்கம் மேலும் நேர்த்தியாக பணியாற்ற வழிவகுக்கிறது.

இவர் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க அமைப்பான மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்டவர். எனது தந்தை அமரர் சந்திரசேகரனின் அமைச்சில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் கடந்த மாகாண சபை தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் 9000 அதிகமான வாக்குகளை பெற்றவரும் ஆவார் . இவரின் 20 வருட தொழிற்சங்க அனுபவம் எம் தொழிற்சங்கத்தை மேலும் வலுப்படுத்தவும் வினைத்திறனாக செயற்படுத்தவும் உதவும்.

இன்னும் பல முக்கியஸ்தவர்கள் மலையக மக்கள் முன்னணியிலிருந்து எம்முடன் இணைய தயாராக உள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எமது அமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles