காலி, வதுரம்ப பகுதியில் 22 வயதுடைய மகளின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், காலி – வதுரம்ப பகுதியை சேர்ந்த 54 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவருக்கான மருந்துகளை உணவில் கலந்து கொடுக்கும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தை இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு , தாக்குதலால் காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த தாயும் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
