மகளிர் ரி – 20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று(03) ஆரம்பமாகவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.

6 தடவைகள் சாம்பியனாகியுள்ள அவுஸ்திரேலியாவுடன் இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் A குழுவில் போட்டியிடுகின்றன.

பங்களாதேஷ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் B குழுவில் போட்டியிடுகின்றன.

இலங்கை நேரப்படி இன்று(03) மாலை 3.30 அளவில் நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் களம் காணவுள்ளன.

தொடரின் இரண்டாவது போட்டி சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணிக்கும் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு(03) 07.45 க்கு ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Latest Articles