பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதற்கமைய இதொகா தலைவர் இன்று (24) மாலை தன்னை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் சாதாரண பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.