மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் இதொகா தலைமைப்பதவியை எவ்வாறு வகிக்க முடியும்? – முற்போக்கு கூட்டணியின் இளைஞர் அணி கேள்வி

“ மக்களால் ஓரங்கட்டப்பட்டு தோல்வியுற்ற ஒருவர் இ.தொ.கா வின் தலைவராக பதவி வகிப்பது இதுவே முதல் தடவையாகும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணி செயளாலர் சரண் ஜீவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“ சம்பள பேச்சு தோல்வில் முடிவுற்றுள்ளது. அது மட்டும் அல்லாது கம்பனிகாரர்கள் சம்பள பேச்சுவார்த்தையின் பிரதான தரப்பான இ.தொ.கா.வையும் அதன் தலைமையையும் அவமானபடுத்தியுள்ளார்கள். இந்நிலைமைக்கு இதொகாவின் தலைவர் செந்தில் முத்து விநாயகம்தான் காரணம்.

மலையக மக்களால் மூன்று தடவைகள் பொது தேர்தலில் நிராகரிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட ஒருவரே இன்றைய இதொகா தலைவர். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருதபாண்டி ராமேஷ்வரன் போன்ற தலைமைகள் இருக்கும் போது இவர் எவ்வாறு தலைவரானார் என்பது கேள்விக்கு உட்படுத்த வேண்டிய விடயமாகும்.

தொழிலாளர்களின் சம்பளத்தை பேரம் பேசுகிறோம் என்று தமக்கான பதவியை பேரம் பேசி உள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.
தலைவர் பதவியும் குறுக்கு வழியில் ஆளுனர் பதவியும் குறுக்கு வழியில் என்பது சுற்றி உள்ளவர்களுக்கு மட்டும் அல்ல வெளியில் உள்ளவர்களுக்கும் நன்றாக தெரியும்.

தோல்வி மேல் தோல்வி கண்ட செந்தில் முத்து விநாயகத்தின் சுய நலனே இன்றைய இ.தொ.கா.வின் பின்னடைவிற்கு காரணமாகும். எனவே, கட்சியின் மூத்தவர்கள் ஒன்று கூடி சிறந்த ஒருவரை தெரிவு செய்து சம்பள பேச்சு வார்த்தைக்கு அனுப்பினால் மாத்திரமே சம்பள பேச்சு வார்த்தை வெற்றியளிக்கும். இல்லை என்றால், பல பெயரில் பல வேடிக்கையான அறிக்கைகள் எழுத வேண்டிய பரிதாப நிலையே தொடரும் .” – என்றுள்ளது.

Related Articles

Latest Articles