பெருந்தோட்ட தொழிலாளர்கள், இன்று கம்பனி நிர்வாகத்திடம் கொத்தடிமைகளாக வாழ்வதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற் சங்கங்களே பதில் கூற வேண்டும். அனுபவமில்லாத தொழிற்சங்கவா திகளே இன்று தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதாகவும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி யின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களின், 42 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின், போராட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் நேற்று (19) தோட்டங்களு க்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தொழிலாளர்களின் அவலநிலைக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இரண்டு தொழிற்சங்கங்களே காரணம். இந்த இரண்டு தொழிற்சங்கங்களும் பெருமைகளைப் பேசி, மக்களை புதை குழிக்குள் தள்ளுகின்றன.
வெள்ளைக்காரர் காலத்தில் கூட, இந்தளவு கஷ்டங்களை தொழிலாளர்கள் அனுபவிக்க இல்லை. இதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் இதுவரைக்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பான பிரச்சினைக்கு வழக்கு இருப்பது வேறு.
தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது தொழிற் சங்கத்தின் பொறுப்பாகும்.மக்களின் கஷ்டத் தை உணராது வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து என்ன பயன். தொழிலாளர்களின் உரிமைகளை தட்டிக் கேட்பதற்கே அங்கத்துவம் பெறப்படுகின்றது. தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக ளைத் தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக கம்பனிகாரர்களுடன் பேச வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
