மக்கள் ஆணையுடன் விளையாடாதீர்: 267 சபைகளிலும் என்பிபி ஆட்சியமைக்கும்!

” மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் உள்ளுராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும். எனவே, மக்கள் ஆணையுடன் எவரும் விளையாட முற்படக்கூடாது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

‘உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாக பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. தென் மாகாணத்தில் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. மேல் மாகாணத்தில் களுத்துறையில் மூன்று சபைகளைத்தவிர ஏனையவற்றி நாமே வெற்றிபெற்றோம்.

நுவரெலியாவிலும் 10 சபைகளை வென்றுள்ளோம். யாழ். மாநகரசபையில்கூட 10 உறுப்பினர்கள் உள்ளனர்.எனவே, 267 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles