மக்கள் ஆணையை காக்கவே ரணிலை ஆதரித்தோம் – நாமல்

நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த ஆணையை பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற இடதுசாரி அரசியல் சக்தியை பாதுகாக்க வேண்டிய தேவையும் இருந்தது. மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles