யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்றையதிம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள் நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளனர்.
தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.










