மக்கள் திண்டாடும்போது கொண்டாட்டம் தேவையா? ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்த இ.தொ.கா.!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல், அவற்றை அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்றைய நிகழ்வுகளில் இ.தொ.கா. பங்கேற்கவில்லை.

தற்போது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறன ஒரு நிகழ்வு தேவையா என்பது உட்பட மேலும் சில காரணங்களாலேயே இ.தொ.கா. பங்கேற்கவில்ல என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles