‘மக்கள் பட்டினியில் வாடும்போது இவர்களுக்கு அமைச்சு பதவி கேட்கிறதா’

“மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீண்ட போலின் வரிசையில் பொருட்களுக்காக நிற்கும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொருட்களுக்கான விலைகள் தொடர்பாக எந்தவித கட்டுப்பாடும் அற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் வைப்பதே, பொருட்களுக்கான விலை என்ற நிலைமை தோன்றியுள்ளது. இந் நெருக்கடியான சூழ்நிலையில் மலையக தோட்ட தொழிலாளர்களுக்காக முன்னிற்க வேண்டியவர்கள், மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசுபவர்களாகவே உள்ளனர்.

இன்றைய அரசாங்கத்தின் ஆரம்பம் முதலே, மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு, அடிக்கு மேல் அடி விழுந்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்களின் அதிகார துஸ்பிரயோகம் என்றும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது. தேவையான நாட்கள் வேலை வழங்குவதில்லை. திட்டமிட்டு வேலை நாட்களை குறைப்பது, வேலை செய்ய வேண்டிய அளவை அதிகரிப்பது, என்பன வழமையான பிரச்சினையாக மாறியுள்ளது. ரூபா ஆயிரம் நாட்க்கூலிக்கான தீர்வு இல்லை. வருமானம் நாளுக்கு நாள் குறைந்தே வருகின்றது. இச்சூழலில் மக்கள் ஒரு வேளை உணவையாவது உட்க்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று மலையக மக்கள் நாளாந்தம் அதிகம் பயன்படுத்தும் கோதுமை மாவிற்கும், மண்ணெண்ணெய்க்கும் பாரிய தட்டுப்பாடு மலையக தோட்ட பிரதேசங்கள் எங்கும் நிலவுகின்றது. பொருட்க்களை வாங்க போலின்களுக்கு போவதா? இல்லை, தொழிலுக்கு போவதா என திண்டாடும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமைக்கு ஆளும் தரப்பில் இருந்தால் தான் அனைத்தையும் சாதிக்கலாம் என கூறி, எமது மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

ஆனால் மக்களின் இந்நிலைமை தொடர்பாக எந்த வித அக்கறையும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை கூறி, பேரம் பேசி, மக்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று மக்களை நாடு ரோட்டில் விட்டுவிட்டு அமைச்சு பதவிக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நிலை காண முடிகின்றது. மக்கள் இந்த அரசாங்கத்தையே விரட்டி அடிக்க பார்த்துக்கொன்டிருக்க்கும் நிலையில், மக்களை மறந்து அமைச்சு பதவிக்காக அலைபவர்களுக்கு மக்கள் விரைவிலேயே பதில் கொடுப்பார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles