மக்கள் பணம் தரவிட்டால் சிறைக்கு செல்வேன் – மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி தம்மால் 10 கோடி ரூபாவை எந்தவிதத்திலும் வழங்கமுடியாது என்றும் அந்தளவு பொருளாதார பலம் தமக்கு கிடையாதென்றும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, சிறிசேன மக்கள் பணம் தராவிட்டால் தாம் சிறைக்குச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் 10 கோடி ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்தவிதத்திலும் எனக்கு 10 கோடி ரூபாவை வழங்கக்கூடிய பொருளாதார பின்புலம் கிடையாது. மக்கள் அதனைத் திரட்டித்தருவர் என்றே நான் எதிர்பார்க்கிறேன். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணத்தை திரட்டுவதற்கு என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது. அவ்வாறு பணம் கிடைக்காவிட்டால் நான் சிறைக்குச் செல்வேன் எனவும் மைத்திரி குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles