அரசுக்கு எதிராக பாரியதொரு பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.கண்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பேரணி மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடைய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது கொழும்பில் மாபெரும் மே தின பேரணியை நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தன்னெழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே இப்பேரணி முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.