மடுல்சீமை பிட்டமாறுவ வீதியில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பிட்டமாறுவ பக்கம் இருந்து மடுல்சீமை பக்கமாக வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று பிட்டமாறுவ மடுல்சிமை வீதியில் D.S. தோட்டத்துக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த கொக்காகலை பகுதியை சேர்ந்த 71 வயதுடைய நபர் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பெண் பிள்ளை ஒருவரும் மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் 71 வயதுடைய நபர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 15 வயதுடைய பெண் பிள்ளை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ஆட்டோவில் சாரதி உட்பட மூவர் பயணித்ததாகவும் விபத்தில் சாரதிக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
