கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 580 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயத்தால் 337 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 78 பேர் 13 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகள் முழுமையாகவும், 47 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
அதேவேளை, சீரற்ற காலநிலையால் 10 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 812 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.










