பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையால் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இடம்பெயர்ந்து, ஹொப்டன் 19 ம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொப்டன் 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் 105 குடும்பங்களும், கொஸ்கொல்ல பகுதியில் 10 குடும்பங்களுமாக 115 குடும்பங்களை சேர்ந்த 400 பேர் இவ்வாறு ஹொப்டன் 19 ம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொழும்புவத்தை கிராம சேவகர் பிரிவில் வெவ்பிடிய கிராமத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்து தொழும்புவத்தை ஜெயந்தி வித்தியாலயத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமு தனராஜா