மண்மேட்டிலிருந்து விழுந்து பசறையில் ஒருவர் உயிரிழப்பு

பசறை கிக்கிரிவத்தை கல்குடா வத்தை பகுதியில் நேற்று (23) இரவு மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்தவர் கல்குடாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய முத்தையா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்று இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக 119 பொலிஸ் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பின்னர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் பசறை பொலிஸ் இரவு நேர நடமாடும் ரோந்து உத்தியோகத்தர் குழுவொன்று அவ்விடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது, குறித்த நபர் மரணித்த நிலையில் காணப்பட்டதாகவும் ​​ பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் மூன்று அடி உயரமான மண் மேட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் சம்பவம் தொடர்பில் பசறை நீதவான் பார்வையிட்ட தன் பின்னர் சடலம் பதுளை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏக்கநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles