மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நியூசிலாந்து நீதி அமைச்சர் கிரி அலன் இராஜினாமா செய்துள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, பொலிஸ் அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த பெண் அமைச்சர் எதிர்நோக்கியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபரில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸின் அமைச்சரவையில் இருந்து வெளியேறும் நான்காவது அமைச்சராக இவர் உள்ளார்.
தலைநகர் வெளிங்டனில் கடந்த ஞாயிறு (23) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரி நான்கு மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டார்.